Published : 13 Jul 2023 06:25 AM
Last Updated : 13 Jul 2023 06:25 AM

சென்னை - திருப்பதி இடையே விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை

திருப்பதி ரயில் நிலைய பகுதியில்பொறியியல் பணிகள் நடக்கவுள்ளதால், சென்னை-திருப்பதி ரயில் சேவை உட்பட பல்வேறு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம்:

ஆக.10 வரை ரத்தாகும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு ஜூலை 13-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு பாசஞ்சர் ரயில், மறுமார்க்கமாக, திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு ஜூலை 13-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை மதியம் 1.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு பாசஞ்சர் ரயில் ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு ஜூலை 13 முதல் ஆக.10-ம் தேதி வரைமாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(16203), திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(16204) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு ஜூலை 13-ம் தேதி முதல்ஆக.10-ம் தேதி வரை காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(16057) ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

திருப்பதி - சென்னை சென்ட்ரலுக்கு ஜூலை 13-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை காலை 10.10 மணிக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில்(16054) திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் ரேணிகுண்டாவில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும்.

இதுதவிர, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x