Published : 10 Jul 2023 06:06 AM
Last Updated : 10 Jul 2023 06:06 AM
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் 90-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் நேற்று சந்தித்தனர்.
2021-ல் ஸ்டாலின் முதல்வரான நிலையில், அழகிரி அரசியலில் ஈடுபடவில்லை. பின்னர், மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றாலும், அழகிரியை சந்திக்கவில்லை. எனினும், உதயநிதி அமைச்சரானதும், மதுரையில் அழகிரியை சந்தித்தார்.
இந்நிலையில், தயாளு அம்மாளின் 90-வது பிறந்த தினம் கோபாலபுரம் இல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், அழகிரி, தமிழரசு உள்ளிட்டோர் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றனர். அப்போது, முதல்வர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT