குன்னூரை அடுத்த வெலிங்டன் ஜிம்கானா கிளப்புக்கு சீல்

வெலிங்டன் ஜிம்கானா கிளப் புக்கு ‘சீல்' வைத்த அதிகாரிகள்.
வெலிங்டன் ஜிம்கானா கிளப் புக்கு ‘சீல்' வைத்த அதிகாரிகள்.
Updated on
1 min read

குன்னூர்: வெலிங்டன் ஜிம்கானா கிளப்பின் குத்தகை காலம் முடிவடைந்ததால், அந்த கிளப்புக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

குன்னூரை அடுத்த வெலிங்டன் அருகே தனியாரின் கட்டுப்பாட்டில் ஜிம்கானா கிளப் இருந்தது. கோல்ப், டென்னிஸ் மற்றும் தங்கும் விடுதிகள், மது பானக்கூடம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் செயல்பட்டு வந்தது. ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் வந்து, மன மகிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று செல்வர். ராணுவ ஹெலிகாப்டர்கள் இங்கு தரை இறக்கப்படும்.

60 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த இந்த கிளப்பின் 99 ஆண்டுகள் குத்தகை முடிவடைந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து டிஃபன்ஸ் எஸ்டேட் அலுவலக (டி.இ.ஓ.) அதிகாரிகள், வெலிங்டன் கன்டோன்மென்ட் அதிகாரிகள், ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர், ஜிம்கானா கிளப்பை ஆய்வு செய்தனர். மேலும், ஒவ்வோர் அறைக்கும் சீல் வைத்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் கூறும்போது, "வெலிங்டனில் 60 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த ஜிம்கானா கிளப் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்தது. இந்த குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், குத்தகையை கிளப் நிர்வாகம் புதுப்பிக்கவில்லை. குத்தகை காலம் முடிவடைந்த பின்னரும் கிளப் செயல்பட்டு வந்ததால், ‘சீல்' வைக்கப்பட்டது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in