குறைகளை விரைந்து தீர்க்க ஏதுவாக சென்னையில் நாளை காவல்துறையின் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாம்’

குறைகளை விரைந்து தீர்க்க ஏதுவாக சென்னையில் நாளை காவல்துறையின் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாம்’
Updated on
1 min read

சென்னை: பொதுமக்களின் வழக்கு மற்றும் குறைகளைத் தீர்க்கும் வகையில், சென்னை காவல் துறை சார்பில் நாளை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், மெகா குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தி, மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் நாளை (ஜூலை 8) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த முகாமில் நான் (சந்தீப்ராய் ரத்தோர்) பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெறுகிறேன். இதேபோல பெருநகர காவல் துறையின் கீழ் உள்ள பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, தியாகராயநகர், பரங்கிமலை ஆகிய 12 காவல் மாவட்டங்களைச் சேர்ந்த துணை ஆணையர்கள், தங்களது அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெறுகின்றனர். எனவே சென்னை பொதுமக்கள், இந்த மெகா குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in