Published : 07 Jul 2023 06:27 AM
Last Updated : 07 Jul 2023 06:27 AM

கூட்டுறவு தயாரிப்பு பொருட்களுக்கான செயலி அறிமுகம்: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்தார்

சென்னையில் நேற்று கூட்டுறவுச் சந்தை செயலியை அறிமுகப்படுத்தினார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். உடன், துறைச் செயலர் டி.ஜெகநாதன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், கூடுதல் பதிவாளர் விஜயராணி உள்ளிட்டோர்.

சென்னை: கூட்டுறவு தயாரிப்பு பொருட்களுக்கான செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் அறிமுகப்படுத்தி, தொடங்கிவைத்தார்.

கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் ஏதுவாக தற்போது ‘கூட்டுறவு சந்தை’ எனும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்கள் மூலம்உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கடைகளுக்கு வந்துதான் வாங்கவேண்டும் என்கிற நிலையை மாற்றி, நுகர்வோர் எளிதாக அவர்களது இல்லங்களில் இருந்தே பொருட்களை பெறுகின்ற வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 8 சங்கங்களின் உற்பத்திபொருட்கள் இதில் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

இச்செயலி மூலம் 64 வகையான பொருட்கள் பட்டியலிடப்பட்டு, ஆர்டர் செய்யப்படும்போது, அவரவர் இருப்பிடங்களுக்கு உணவுப்பொருட்கள் கொண்டுவந்து சேர்க்கப்படும். இத்திட்டம் நடப்பாண்டுசட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இச்செயலியில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தயாரித்த 44 வகையான மளிகை பொருட்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் 20 வகையான உயர்தர நுண்ணூட்டச் சத்துகள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் என மொத்தம் 64பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

இச்செயலியை பொதுமக்கள்அனைவரும் பயன்படுத்தி தரமான கூட்டுறவு தயாரிப்புகளை பெற்று பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை செயலர் டி.ெஜகநாதன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், கூடுதல் பதிவாளர்கள் விஜயராணி, வில்வசேகரன், கே.வி.எஸ்.குமார், சுப்பிரமணியன், மிருணாளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x