பைக்-டாக்ஸி பயன்பாடு | காவல் துறை உத்தரவுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும்: நீதிமன்றத்தில் அரசு வலியுறுத்தல்

பைக்-டாக்ஸி பயன்பாடு | காவல் துறை உத்தரவுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும்: நீதிமன்றத்தில் அரசு வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மோட்டார் வாகனச் சட்டப்படி, இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது குற்றமாகும். எனவே, `ரேபிடோ செயலியை' கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளேஸ்டோர்களில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகர காவல் துறையின் உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதித்தது. மேலும், பைக்-டாக்ஸி தொடர்பாக தமிழக அரசு விதிமுறைகளை வகுக்கும் வரை ரேபிடோ பைக் டாக்ஸி சேவையைத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைநகரான டெல்லியில் பைக் டாக்ஸிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாகக் கூறி, அந்த உத்தரவின் நகல் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், பைக் டாக்ஸிக்கு எதிரான தமிழக அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in