Published : 25 Jun 2023 08:45 AM
Last Updated : 25 Jun 2023 08:45 AM
மேட்டூர் / சேலம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கொங்கணாபுரம், வீரகனூர் சந்தையில் ரூ. 12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
சேலம் மாவட்டம், கொங்கணா புரத்தில் சனி வாரச் சந்தை நேற்று கூடியது. பக்ரீத் பண்டிகை வரும் 29-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், 11 ஆயிரம் ஆடுகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் 10 கிலோ எடைகொண்ட வெள்ளாடு ரூ.5,500 முதல் ரூ.7,000, கிடாய் ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை, 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.14 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, பந்தய சேவல்கள் ரூ.2,500 முதல் ரூ.6,500 வரை விற்கப்பட்டன. பழங்களும், காய்றிகளும் விற்கப்பட்டன. சந்தையில் ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வீரகனூர்: தலைவாசல் அருகே வீரகனூரில் சனிக்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடைபெறும். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று,அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. வெள்ளாடு, செம்மறி ஆடு, மேச்சேரி இன ஆடு என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சந்தையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் ரூ.4 கோடிக்கு விற்பனையாகின. 60 கிலோ எடையுள்ள ஆடு ரூ. 40 ஆயிரம் வரை விற்பனையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT