அதிகாலை 4.30 முதல் காலை 10.15 மணி வரை: செந்தில்பாலாஜிக்கான அறுவை சிகிச்சையின் போது நடந்தது என்ன? 

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
Updated on
1 min read

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று (ஜூன் 21) அதிகாலை ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த சிகிச்சை அதிகாலை 4.30 மணி முதல் காலை 10.15 மணி வரை அறுவை சிகிச்சையின் போது என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

காலை 4.30 மணி : அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ரத்த அழுத்தம் பரிசோதிக்கபட்டு, மயக்கவியல் மருத்துவர்கள் மயக்க மருந்து செலுத்தினர்.

காலை 5 மணி : மருத்துவமனை இருதயவியல் துறை மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சையை தொடங்கினர்.

காலை 6.30 மணி : மார்பு, எலும்பு மற்றும் விலா எலும்பு கூடுகள் திறக்கப்பட்டு இதய மார்புச் சுவரின் உட்புறத்திலிருந்து (உட்புற மார்பு தமனியிலிருந்து ) ஆரோக்கியமான ரத்த நாளத்தின் ஒரு பகுதியை எடுத்து, அடைக்கப்பட்ட தமனிக்கு மேல் கீழாக முழுமையாக இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காலை 10.15 மணி : 5 மணி நேரம் 15 நிமிடங்கள் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக மருத்துவமனை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், "அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அவருடைய இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் இருந்த 4 அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in