

ஒசூர்: ஓசூரில் தெரு நாய்கள் கடித்ததில் 6 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது காயத். இவர் ஓசூர் வட்டாட்சியர் சாலை பகுதியில் உள்ள தாசரிபேட்டையில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் தங்கி, சிப்காட் பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்,நேற்று இவரது மகள் ரோகாயா காதுன் (6) அப்பகுதியில் உள்ள கடைக்குப் பால் வாங்கச் சென்றார்.
அப்போது, தெருவில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் சிறுமியைத் துரத்திக் கடித்தன. இதில், உடலின் பல இடங்களில் அவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. அவரது பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.