‘‘நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தேனே..’’: அற்புதம்மாள் உருக்கமான பேட்டி

‘‘நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தேனே..’’: அற்புதம்மாள் உருக்கமான பேட்டி
Updated on
1 min read

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி கள் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் வெள்ளிக்கிழமை அறிவித்தார். இத்தீர்ப்பைக் கேட்ட பேரறிவாளனின் தாய் அற்புதம் மாள், ‘‘நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையாக இருந்தேன். இனி மீண்டும் என் மகனின் விடு தலைக்காக போராடப் போகிறேன்’’ என்றார்.

சென்னையில் பத்திரிகையாள ரிடம் அவர் மேலும் கூறியதாவது:

எனது மகன் விடுதலையாவான் என்ற நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையாக இருந்தேன். ஆனால், இந்த வழக்கு 5 பேர் கொண்ட குழுவுக்கு மாற்றப் பட்டுள்ளது. 23 வருடங்கள் போராடி யுள்ளேன். இனியும் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. என் மகன் நிரபராதி என்பதை போதிய ஆதாரங்களுடன் நிரூபித் திருக்கிறேன்.

‘‘எந்த அரசியல் சூழ்ச்சியும் தடுக்க முடியாது’’

விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்று சதாசிவம் அய்யா கூறிய பிறகுதான், 7 பேரின் விடுதலையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். என் மகன் விடுதலையாகிவிடுவான் என்று முதல்வர் ஊக்கமளித்தார்.

எனினும், எனக்கு நீதிமன்றத்தின் மேல் உள்ள நம்பிக்கை போக வில்லை. எனது மகன் நிர பராதி என்று இன்னும் அதிக சாட்சியங் களுடன் நிரூபிக்க இது ஒரு வாய்ப்பு.

எனவே என் மகனுக்காக தொடர்ந்து போராடுவேன். எந்த அரசியல் சூழ்ச்சியும் இந்த போராட் டத்தை தடுக்க முடியாது.

இவ்வாறு அற்புதம்மாள் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in