

சென்னை: கால் வலியால் அவதிப்பட்டு வந்த ஆந்திர மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. சென்னையில் உள்ள வீட்டில் தங்கியிருந்த அவர் கால் வலி, கால் வீக்கத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்குத் தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.