பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவு

சிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை
நிலத்தை விற்ற முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி

நிலத்தை விற்ற முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி

Updated on
2 min read

பழநி: பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​பிலான நிலம் சட்​ட​விரோத​மாகப் பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது தொடர்​பாக சிபிசிஐடி விசா​ரணைக்கு பயந்து நிலத்தை விற்​றவர், வாங்​கிய​வர்​கள் என 3 பேர் தலைமறை​வாகினர். அவர்​களைத் தேடும் பணியை சிபிசிஐடி போலீ​ஸார் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலை அடி​வாரத்தில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள 1.40 ஏக்​கர் நிலம் முறை​கே​டாக பத்​திரப்​ப​திவு செய்​தது தொடர்​பாக சார்​ப​தி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், நிலத்தை விற்​பனை செய்​தவர், வாங்​கிய​வர்​கள் என 4 பேர் மீது பழநி அடி​வாரம் போலீ​ஸார் வழக்​கு ​ப​திவு செய்​தனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக சார்​ப​தி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், மாவட்ட பதி​வாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர். பத்​திரப்​ப​திவை​யும் உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​தது. மேலும், வழக்கு விசா​ரணை சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்​டது. இதையடுத்​து, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்​கம் தலை​மையி​லான குழு​வினர் விசா​ரணை​யைத் தொடங்​கி, தேவஸ்​தானம் மற்​றும் பத்​திரப்​ப​திவு அலு​வல​கத்​தில் விசா​ரித்​தனர். நேற்று திண்​டுக்​கல் சிபிசிஐடி அலு​வல​கத்​தில் பழநி தேவஸ்​தான நிலப்​பிரிவு கண்​காணிப்​பாளர் முரு​கானந்​தம், வழக்​குப் ​பிரிவு கண்​காணிப்​பாளர்​கள் சிவனேசன், கணப​தி, வட்​டாட்​சி​யர் (ஓய்​வு) மாரியப்​பன், கிராம நிர்​வாக அலு​வலர் (ஓய்​வு) சின்​ன​சாமி ஆகிய 5 பேரிடம் எஸ்பி சாஜிதா விசா​ரணை நடத்​தி​னார்.

இதே​போல, பத்​திரப்​ப​திவு அலு​வல​கத்​தில் மற்​றொரு குழு​வினர் ஆய்வு செய்து சிசிடிவி வீடியோ பதிவு​களைப் பெற்​றுக்​கொண்​டனர். கிடுக்​கிப்​பிடி விசா​ரணை​யால் தேவஸ்​தானம் மற்​றும் பதிவுத் துறை அதி​காரி​கள், பணி​யாளர்​கள் பலர் கலக்​கத்​தில் உள்​ள​தாக கூறப்​படு​கிறது. வழக்கு தொடர்​பாக விசா​ரணைக்கு ஆஜராக மனு​தா​ரர்​கள், எதிர்​மனு​தா​ரர்​களுக்கு சிபிசிஐடி போலீ​ஸார் சம்​மன் அனுப்​பும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இந்த நிலை​யில் நிலத்தை விற்ற திருப்​பு​கழ் சுவாமிகள், முரு​க​தாஸ் சுவாமிகள் மற்​றும் தண்​ட​பாணி சுவாமிகள் அறக்​கட்​டளை​யைச் சேரந்த முரு​க​தாஸ், நிலத்தை வாங்​கிய உடுமலைப்​பேட்டை பாப்​பான்​குளத்​தைச் சேர்ந்த வெள்​ளைதுரை மற்​றும் பழநி டி.கே.என்​.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் தலைமறை​வானதும், செல்​போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்​திருப்​பதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

மேலும் பத்​திரப்​ப​திவு நாளில் சாட்சிக் கையெழுத்​திட்​டோரும் தலைமறைவாகி உள்​ளனர். இவர்​களைத் தேடும் பணி நடந்து வரு​கிறது. முறை​கே​டாக கோயில் நிலத்தை விற்றவர், வாங்​கிய​வர்​கள் புகைப்​படத்தை வெளி​யிட வேண்​டும் என அரசி​யல் கட்​சி​யினர் உள்பட பலரும் வலி​யுறுத்தி வரும் நிலை​யில், நிலத்தை விற்ற முரு​க​தாஸ், வாங்​கிய சேதுபதி ஆகியோரது புகைப்​பட​மும், நிலம் தொடர்​பான வில்​லங்​கச் சான்​றும் இணை​யத்​தில் வைரலாகி வரு​கிறது.

<div class="paragraphs"><p>தண்டபாணி சுவாமிகள் மடம் தொடர்பான வில்லங்கச் சான்று.</p></div>

தண்டபாணி சுவாமிகள் மடம் தொடர்பான வில்லங்கச் சான்று.

மேலும் 2 பேருக்கு தொடர்பு? - கடந்த மார்ச் மாதம் ரூ.100 கோடி நிலத்தை பத்​திரப்​ப​திவு செய்ய முயற்சி நடந்​த​போது, பணி​யில் இருந்த சார்​ப​தி​வாளர் பழனிச்​சாமி வழக்கு நிலு​வை​யில் இருப்​ப​தால் பதிவு செய்ய இயலாது எனக்​கூறி நிராகரித்​தார். அவர் பணி​யிட மாறு​தலில் சென்​றார். பின்​னர் சார்​ப​தி​வாளர் பாலசந்​தர் பொறுப்​பேற்ற நிலை​யில் ஜூலை 3-ம் தேதி சர்ச்​சைக்​குள்​ளான நிலத்தை பதிவு செய்​வதற்​கான சில முன்​னேற்​பாடு​கள் நடந்​துள்​ளன.

ஜூலை 6-ம் பாலசந்​தர்விடு​முறை​யில் சென்​ற​தால், சிறப்பு பணிக்கு வந்த ஜஸ்​டின் மணி​கண்​டன் நிலத்தை பதிவு செய்​துள்​ளார். இந்த விஷ​யத்​தில் மேற்​கண்ட 3 பேரிட​மும் சிபிசிஐடி விசா​ரிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இந்த மோசடி​யில் பல முக்​கிய அரசி​யல் புள்​ளி​கள், அதி​காரி​கள் சம்​பந்​தப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படும் நிலை​யில் இது​வரை கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள், வீடியோ ஆதா​ரங்​களை வைத்து சிபிசிஐடி போலீ​ஸார்​ 3 குழு​வாக​ பிரிந்​து தீவிர வி​சா​ரணை​யில்​ ஈடு​பட்​டுள்​ளனர்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in