பதிவு துறையில் இந்தாண்டு இலக்கு ரூ.25 ஆயிரம் கோடி

பதிவு துறையில் இந்தாண்டு இலக்கு ரூ.25 ஆயிரம் கோடி
Updated on
1 min read

சென்னை: சென்னை விருகம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்களில் அமைச்சர் பி.மூர்த்தி, நேற்று திடீர் ஆய்வுசெய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 தி்ட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.இந்த திட்டம் மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பத்திரப்பதிவில் உள்ள குறைபாடுகள் களையப்படும். போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில் அவற்றை கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in