சென்னை: வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 1,005 பணியாளர்கள் முதற்கட்டமாக குலுக்கல் முறையில் தேர்வு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. இதில், சென்னை மாவட்​டத்​தில் ஆர்​.கே.நகர், திரு.​வி.க.நகர், ராயபுரம், துறை​முகம் மற்​றும் சேப்​பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி ஆகிய தொகு​தி​களின் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் ராணி மேரி கல்​லூரி வாக்கு எண்​ணும் மையத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

பெரம்​பூர், கொளத்​தூர், வில்​லி​வாக்​கம், எழும்​பூர், ஆயிரம் விளக்​கு, அண்​ணாநகர் தொகு​தி​களின் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் லயோலா கல்​லூரிவாக்கு எண்ணும் மையத்​தி​லும், விரு​கம்​பாக்​கம், சைதை, தியாக​ராயநகர், மயி​லாப்​பூர், வேளச்​சேரி ஆகிய தொகு​தி​களின் இயந்திரங்​கள் அண்ணா பல்​கலைக்​கழக வாக்கு எண்​ணும் மையத்​தி​லும் உள்ள பாது​காப்பு அறை​களில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளதை முன்​னிட்​டு, வாக்கு எண்​ணும் பணி​யில் ஈடுபட உள்ள வாக்கு எண்​ணிக்கை மேற்​பார்​வை​யாளர்​கள், உதவி​யாளர்​கள், நுண் பார்​வை​யாளர்​கள் என மொத்​தம் 1,005 நபர்​களை முதற்​கட்​ட​மாக சட்​டப்​பேரவை தொகுதி வாரி​யாக கணினி குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யும் பணிரிப்​பன் கட்​டிட வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

மாவட்ட தேர்​தல் அலு​வலரும், மாநக​ராட்சி ஆணை​யருமான ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் இக்​கூட்​டம் நடந்​தது. வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் மேற்​கொள்ள வேண்​டிய நடை​முறை​கள் தொடர்​பாக பல்​வேறு ஆலோ​சனை, அறி​வுரைகளை அவர் வழங்​கி​னார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மே தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in