பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்: கர்நாடக முதல்வரிடம் கிருஷ்ணகிரி எம்பி வலியுறுத்தல்

பெங்களூரு-ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுப்படுத்த வலியுறுத்தி, கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்தினார்.
பெங்களூரு-ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுப்படுத்த வலியுறுத்தி, கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்தினார்.
Updated on
1 min read

ஓசூர்: பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி எம்பி, கர்நாடக முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தினார்.

ஓசூரிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கும், பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு ஏராளமான தொழிலாளர்களும் வந்து செல்கின்றனர்.

இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வசதிக்காக பெங்களூரு பொம்மசந்திராவிலிருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்லக்குமார் தொடர்ந்து வலியுறுத்தினார். இதையடுத்து, சர்வே பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோரை எம்பி செல்லக்குமார் சந்தித்து, பெங்களூரு-ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in