

கோப்புப் படம்
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை அருகே தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் சிக்கியது.
மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு தொகுதி மக்கள் வாக்காளருக்கு பணம் அல்லது பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறதா என தேர்தல் பறக்கும் படை சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில், புக்கத்துத்துறை- உத்திருமேரூர் சாலையில் வட்டாட்சியர் புத்தியப்பன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, செங்கல்பட்டு நோக்கி வந்த காரை பறக்கும் படையினர் சோதனை செய்தபோது காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.