சிபிசிஐடி டிஜிபி-யாக பாலநாக தேவி நியமனம்: தமிழகம் முழுவதும் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரி பாலநாக தேவி

ஐபிஎஸ் அதிகாரி பாலநாக தேவி

Updated on
1 min read

சென்னை: உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்பதாவது:

மாநில சைபர் க்ரைம் பிரிவு டிஜிபி-​யாக இருந்த பி.​பால நாக தேவி சிபிசிஐடி டிஜிபி-​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அங்​கிருந்த அபின் தினேஷ் மோடக் மாநில சைபர் க்ரைம் கூடு​தல் டிஜிபி-​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்கப்​பட்​டிருந்த கூடு​தல் டிஜிபி வித்யா ஜெயந்த் குல்​கர்னி பொருளா​தார குற்​றப்​பிரிவு கூடு​தல் டிஜிபி-​யாக பணியமர்த்தப்பட்​டுள்​ளார்.

இதே​போல், சென்னை காவல் நுண்​ணறிவு பிரிவு (2) துணை ஆணை​யர் எம்​.​ராமமூர்த்தி க்யூ பிரிவு சிஐடி எஸ்​பி-​யாக மாற்​றப்​பட்​டுள்​ளார். அங்​கிருந்த பி.கே.அர​விந்த் சென்னை எஸ்​பிசிஐடி பிரிவு (1) எஸ்​பி-​யாக பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

மேலும், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பி அர்​பிதா ராஜ்புட் சென்னை அண்​ணா நகர் காவல் துணை ஆணை​ய​ராக மாற்​றப்​பட்​டுள்​ளார்.

அங்​கிருந்த துணை ஆணை​யர் ஈஸ்​வரன் சென்​னை​யில் உள்ள தமிழ்​நாடு கமாண்டோ படைப்​பிரிவு எஸ்​பி​யாக மாற்​றப்​பட்​டுள்​ளார். ஆவடி காவல் ஆணை​யரகத்​தில் மத்​திய குற்​றப்​பிரிவு துணை ஆணை​ய​ராக இருந்த எஸ்​.ஆர்​.செந்​தில் குமார் நாகப்​பட்​டினம், கடலோர பாது​காப்பு குழும எஸ்​.பி​யாக மாற்​றப்​பட்​டுள்​ளர்.

சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி வி.சரவண குமார் தீவிர​வாத தடுப்பு பிரிவு எஸ்​.பி​யாக​வும், அங்​கிருந்த எஸ்.பி டி.ரமேஷ் பாபு திருநெல்​வேலி சிட்டி தலை​மை​யிட துணை ஆணை​ய​ராக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

இவ்​வாறு உத்​தர​வில் உள்​துறை செயலர் கே.மணி​வாசன்​ தெரிவித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>ஐபிஎஸ் அதிகாரி பாலநாக தேவி </p></div>
அரசுத் துறைகளில் 3 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில் 41 காலி இடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in