அடித்துத் துரத்தும் ‘கில்லி’ | மறக்க முடியுமா?

அடித்துத் துரத்தும் ‘கில்லி’ | மறக்க முடியுமா?
Updated on
1 min read

கில்லி என்றதும் திரைப்படத்தின் பெயர்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அந்தப் படத்துக்கும் கில்லி விளையாட்டுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. அதில் வருவது கபடி. கபடியும் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றுதான்.

தீவிரமாகச் செயல்படுபவர்களைச் ‘சும்மா கில்லி மாதிரி வேலை செய்யறான் பாரு’ என்று சொல்வார்கள். அந்தச் சொலவடைக்குக் காரணம், கிரிக்கெட் விளையாட்டில் பந்துவீச்சாளர் எறியும் பந்தை நொடிக்குள் அடித்து விரட்டுவது போன்றே கில்லி விளையாட்டிலும் செயல்பட்டு, கில்லியை அடித்துத் துரத்துவார்கள்.

இந்த விளையாட்டு கில்லி, கிட்டிப்புள், சில்லாங்குச்சி, கில்லி தாண்டு என்று ஊருக்கு ஒரு பெயரில் அழைக்கப்பட்டது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாடுவார்கள். இதற்குத் தோராயமாக 2 அடி நீளத்துக்கு ஒரு கோல் (இதைத் தாண்டு என்றும் அழைப்பார்கள்), அரை அடி நீளத்துக்கு மரத்தால் ஆன ஒரு புள் (பறப்பதால் வந்த பெயர்) இருந்தால் போதும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in