தஞ்சாவூர் மங்கள விலாசம் | வரலாற்றுச் சுவடுகள்

தஞ்சாவூர் மங்கள விலாசம் | வரலாற்றுச் சுவடுகள்
Updated on
2 min read

தஞ்சாவூர் தெற்கு வீதியில் நவீனமான கடைகளின் வரிசைக்குப் பின்னாலிருந்து பாழடைந்த காலத்தின் போர்வையுடன் எட்டிப்பார்க்கிறது ஒரு பிரம்மாண்ட மாளிகை. இதன் பெயர்தான் ’மங்கள விலாசம்.

ஒரு காலத்தில் மராட்டிய மன்னர்களின் அந்தப்புரமாக இருந்திருக்கிறது. கடைசியாக இங்கு அறுபது பெண்களும், பதினேழு குழந்தைகளும் இருந்ததாக ஆவணக்குறிப்பு ஒன்று கூறுகிறது. அரண்மனைக்குள் இருந்த கல்யாண மகாலுக்கு மங்கள விலாசத்துப் பெண்கள் சென்று வருவது வழக்கமாக இருந்திருக்கிறது.

அக்காமார் கூட்டம்

ஆங்கிலேயர் ஆட்சியில் தஞ்சாவூர் நகரை மட்டுமே ஆளும் நிலைக்குத் தள்ளப் பட்ட மராட்டிய மன்னர்கள் பெயருக்கு பொம்மை ராஜாக்களாக நீடித்த காலம் அது. அவர்களை அண்டி வாழ்ந்த பெண்கள் தமது கடைசிக் காலத்தை இந்தக் கட்டிடங்களில் கழித்தார்கள். ‘அம்மா மார்கள்’, ‘பாயிமார்கள்’ என்று இவர்கள் அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்குக் குற்றேவல் செய்யும் பெண்கள் ‘அக்காமார் கூட்டம்’ என்று அழைக்கப்பட்டனர்.

மங்கள விலாசப் பெண்கள்

மங்கள விலாசத்தில் வசித்த இந்தப் பெண்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 150 வீதம் ‘மொயின்’ வழங்கப்பட்டது. இப்பெண்களுக்கு உதவியாக ‘காரியஸ் தர்கள்’ பதினான்கு பேர் பணிபுரிந்துள்ளனர். மங்கள விலாசத்தில் வசித்த அம்மாமார் அல்லது பாயிமார் என்கிற பெண்களுக்குக் குழந்தைகளும் இருந்துள்ளனர்.

ஆண் குழந்தையாக இருந்தால் (பெயருக்கு முன்னால்) விஜய என்றும் பெண் குழந்தை யாக இருந்தால் பெயருக்குப் பின்னால் பாயி என்றும் சேர்க்கப்படும் (விஜய சதானந்தஜி, விஜய சித்தவல்லி பாயி).

இந்தக் குழந்தைகளுக்கு முறையாகச் சடங்குகள் செய்விக்கப்பட்டன. சடங்கு களில் மகாராஜா மணையில் உட்கார மாட்டார். எதிரில் உள்ள இருக்கையில்தான் வீற்றிருப்பார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in