

பள்ளிப் பருவம் என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் விஷயங்களில் ‘இங்க் பேனா’வும் ஒன்று. பென்சிலில் இருந்து பேனாவுக்கு மாறும் வகுப்பின்போது ஏற்படும் உற்சாகமே தனி. நாமும் வளர்ந்துவிட்டோம் என்கிற தன்னம்பிக்கை மனதில் எட்டிப்பார்க்கும்.
இங்க் கடன் வாங்கியது, ஹீரோ பேனாவுக்கான தனி மதிப்பு, பல வகை பேனாக்களைப் பயன்படுத்தி இருந்தாலும், தேர்வுக்கு எனத் தனி பேனாவை எடுத்துச் சென்றதெல்லாம் இன்று மலரும் நினைவுகளாகிவிட்டன.
பள்ளிப் பருவத்தோடு ‘இங்க் பேனா’வுக்கும் ஒருவருக்குமான உறவு முடிந்துபோய்விட்டது. வெகு சிலரே அதற்குப் பிறகும் இங்க் பேனாக்களைப் பயன்படுத்துகிறார்கள்.