நான்காயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்! | வரலாற்றைத் தேடி...

நான்காயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்! | வரலாற்றைத் தேடி...
Updated on: 
2 min read

Gen Z ஏன் பௌதிகச் சொத்துகளை விரும்புவதில்லை? | சொத்துஒரு மனிதர் எதிர்பார்ப்பு ஏதுமின்றித் தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை உலகம் அறியுமாறு செயலாற்றுவது, பின்னொரு காலத்தில் வரலாறாக மாறக்கூடும்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ்வாலை, செத்தவரை பாறை ஓவியங்களைக் கண்டுணர்ந்த போது அதுவே மனதில் பளிச்சிட்டது. தமிழகத் தொல் லியல் ஆய்வுக் கழகத்தின் மரபு நடைப்பயணத்தில் இவற்றைக் காண நேர்ந்தது.

விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையை ஒட்டியமைந்துள்ள கீழ்வாலையின் உட்பகுதியில் ஏறக்குறைய ஒரு கி.மீ. கடந்து சென்றால் பாறைகள், குன்றுகள், சிறிய மலைகளைக் காண முடியும். அதிலொன்றில் பழங்கால ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பது 1982இல் கண்டறியப்பட்டது.

இந்த ஊர் தற்போது ‘மேல்வாலை’ என்றழைக்கப்படுகிறது. ஆங்காங்கே இருக்கும் பாறைகள், ஓரளவு உயர்ந்த மரங்களைக் கடந்து மேடேறிச் சென்றால், வேலிகள் இடப்பட்ட இடத்தில் இந்த ஓவியங்களைக் காணலாம்.

சிவப்பு வண்ணத்தில் தீட்டப்பட்டிருப்பதால், உள்ளூர் மக்கள் இதனை ‘ரத்தப்பாறை’, ‘ரத்தக்கல்’ என்றழைக் கின்றனர். ஏறக்குறைய 4,000 ஆண்டுகள் பழமை யானதாக இப்பாறை ஓவியங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in