

‘டூம் ஸ்கிராலிங்’, ‘பிரெயின் ராட்’ போன்ற வார்த்தை களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடந்த சில ஆண்டுகளாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதியால் கவனம் ஈர்த்த வார்த்தைப் பட்டியலில் இடம்பிடித்த வார்த்தைகள் இவை.
எந்நேரமும் திறன்பேசியும் கையுமாக இருப்பவர்கள் ‘ஸ்கிராலிங்’ செய்கிறோமே தவிர ‘ஃபோகஸ்’ குறைந்துவிட்டது எனலாம். அப்படி இல்லாமல் கவனக்குவிப்பின்மீது கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் ‘ஒரு கப் ஆக்ஸிஜன்’ எனும் புது செயலியை வடிவமைத்துள்ள சென்னை இளைஞர்கள்.
முயற்சியும் பயிற்சியும்
சமூக வலைத்தளத்தைத் திறந்தாலே அல்காரிதம்தான் நம்மை ஆட்டிப்படைக்கிறது. எதைப் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும் என அடுத்தடுத்து பரிந்துரைகளை அது தட்டிவிட்டுக் கொண்டே இருப்பதற்கு இந்த அல்காரிதம் முக்கியக் காரணம்.