சிவனுக்குக் கோயில் கட்டிய இஸ்லாமியர்!

சிவனுக்குக் கோயில் கட்டிய இஸ்லாமியர்!
Updated on
2 min read

கடலில் கப்பல்களின் போக்கினைக் காற்றுத் தீர்மானிக் கும். அன்று எங்களது பயணத் திட்டங்களை மழை தீர்மானித்தது. நாட்டின் வடக்கில் இருக்கும் கார்கிலிலிருந்து கிழக்குப் பக்கமாகத் திரும்பி லே நகரம் செல்லவேண்டிய எங்களை, அதற்கு எதிரே இருக்கும் காஷ்மீருக்குக் கொண்டுசேர்த்தது வானிலை அறிவிப்பு.

இரண்டு நாள்கள் மழைக்கு ஏதுவாக நாங்கள் தங்குவதற்கு உரிய இடம் என்று எங்கள் ஓட்டுநர் சொன்ன இடத்தின் பெயர் நரநாக். சோன்மார்கி லிருந்து 60 கி.மீ. தொலைவில் இருக்கும் ஊர். காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின்கீழ் வரும் ஒரு சிறு மலைக் கிராமம்.

அடித்தள ஊர்

கே.ஜி.எல். எனப்படும் காஷ்மீர் கிரேட் லேக்ஸ் மலை யேற்றம் தொடங்கும் இடம் இந்தக் கிராமம்தான். எட்டு நாள்கள் மலையேற்றத்தில் ஏழு ஏரிகள், பசுமை மலைகள் என அனைத்தையும் கண்டு ரசிக்கலாம். கடல் மட்டத்திலிருந்து 7,800 அடியில் தொடங்கி 14,000 அடி உயரம் வரை மலையேற்றம் இருக்கும்.

இதைச் செய்ய நினைப்பவர்கள், முதலில் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம். நரநாகில் ஓரிரு நாள்கள் தங்கிவிட்டு மலையேறுவது வழக்கம். ஹரமுக் சிகரம் போன்று வேறு சில மலையேற்றங்களுக்கும் இதுதான் பேஸ் கேம்ப்.

பைன் மரங்களும் வால்நட் மரங்களும் நிறைந்த இடம் நரநாக். ஊருக்கு ஓரமாக ஓடும் வாங்கத் நதியும், ஊரைச் சூழ்ந்திருக்கும் வாங்கத் காட்டுப்பகுதியும் நரநாகுக்குக் கூடுதல் அழகு சேர்க்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in