விசுவாசத்தின் முடிவு | மயில்கள் அகவும் பெருநிலம் 47

விசுவாசத்தின் முடிவு | மயில்கள் அகவும் பெருநிலம் 47
Updated on
2 min read

தாரண வருடத்து மார்கழி மாதம். மானா வாரி அறுவடையைக் கெடுக்கும் பருவமழை பாட்டம் பாட்டமாகப் பெய்துகொண்டிருந்தது. இளமதிய நேரத் தில் நான் சென்னை கிளம்புவதற்காகத் தோள்பையில் துணிகளை எடுத்து அடுக்கிய படி இருந்தேன்.

அம்மா சொன்னார்: “உன்னை அப்புச்சி (அம்மாவின் அப்பா) கேட்டுக்கிட்டே இருந்துச்சுடா… ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்து பொறப்படு…”

எங்கள் தோட்டத்து வீட்டிலிருந்து நான் மழையின் ஊடே குடையைப் பிடித்துக் கொண்டுக் குறுக்கு வழியில் நடந்தேன்.

ஈர மண்பாதையில் மழைநீர் பெருகி ஓடிற்று. அப்புச்சியின் தோட்டத்துக்குச் சென்றுப் பனையோலைக் கொட்டகைக்குள் நுழைந்தேன். சாணி மெழுகிய தரையில் அமர்ந்து அப்புச்சி கற்றாழை மஞ்சிக் கயிறு திரித்துக்கொண்டிருந்தார்.

நான் மர நாற்காலியில் அமர்ந்த தருணம், மழைக்குத் துண்டால் தலையில் முக்காடிட்டபடியே கோவில்பாளையத்துக் கோயில் பூசாரி, பெரியவர் ஒருவருடன் கொட்டகைக்குள் வந்து அப்புச்சியின் எதிரே உட்கார்ந்தார்.

சுமந்து வந்த பிரம்புக் கூடையிலிருந்து தளிகைச்சோறு (சாமிக்குப் படைத்த சோறு) கொண்ட வாழையிலைப் பொட்டலத்தை எடுத்து அப்புச்சியிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்: “மொதக்கோழி கூப்பிட எந்திரிச்சு பூசையை ஆரம்பிச்சேனுங்க… காடு காடா போயி எல்லாச் சாமிகளுக்கும் பூசை முடிக்க இந்நேரம் ஆகிப் போச்சுங்க… எழுவது வயசைத் தாண்டறேன்… அடுத்த மார்கழிக்குக் கோயில் பூசையெல்லாம் வேண்டாமுன்னு நெனைச்சிருக்கேன்….” கோயில் பூசாரியுடன் வந்த அந்தப் பெரிய வர் மண்சுவரில் சாய்ந்து நின்றுகொண்டார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in