கிடை எழுப்பிய நடிகர் | மயில்கள் அகவும் பெருநிலம் 20

கிடை எழுப்பிய நடிகர் | மயில்கள் அகவும் பெருநிலம் 20

Published on

விசு வருடத்தின் மாசி மாதம். முற்பகல் வெயில் சுட்டெரித்த நேரம். முத்தூரில் எழுத்தாளர் தேவிபாரதியைச் சந்தித்துவிட்டு, எங்கள் தோட்டத்து வீட்டுக்கு வந்தபோது வெளியில் புறப்பட்டுக் கொண்டிருந்த பெரியப்பா சொன்னார்: “நம்ம ‘நடிகர்’ காலமாயிட்டாருடா…” நானும் பெரியப்பாவோடு ஊரை நோக்கி நடந்தேன்.

எங்கள் சுற்றுவெளியில் நடிகர் என்பது ராமசாமி அப்பாருவைக் (அப்பாவழித் தாத்தா) குறிக்கும். அவர் எந்தத் திரைப்படத்திலும் நாடகத்திலும் நடிக்கவில்லை. அவருக்கு நடிகர் என்கிற பட்டப்பெயர் வந்த காரணத்தைப் பெரியப்பா சொல்லத் தொடங்கினார்.

பார்த்திப வருடத்துப் பருவகாலம். ஊரில் சரியான தானிய விளைச்சல் இல்லை. இரண்டாம் உலக யுத்தமும் முடிவுறும் தறுவாயில் இருந்தது. கடைகளிலும் சந்தைகளிலும்கூடத் தானியங்கள் கிடைப்பது அரிதாகவே இருந்தது.

விவசாயி வீட்டுப் பிள்ளைகளும் வேறு வேலைக்குப் போக முயன்றுகொண்டிருந்தனர். அப்போது பதினைந்து வயதான ராமசாமி அப்பாருவும் தூரத்துச் சீமைக்கு வேலை தேடி ஊரைவிட்டுப் புறப்பட்டார்.

அன்றுதான் நல்லிமடம் தலைவாசலில் தானிய வியாபாரத்தில் நொடித்துப்போன வியாபாரி ஒருவர் மளிகைக்கடையைத் தொடங்கினார். ராமசாமி அப்பாரு அந்த மளிகைக்கடையிலேயே வேலைக்குச் சேர்ந்துகொண்டார்.

அவரின் சூட்டிகையான பேச்சால் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இருப்பினும் கல்லாவில் இருக்கும் காசுகள் தொடர்ந்து திருட்டுப் போயின. வியாபாரியும் ராமசாமி அப்பாருவைச் சந்தேகப்பட ஆரம்பித்தார். ராமசாமி அப்பாரு மறுத்துச் சொல்லிப் பார்த்தார்.

“நான் காந்தி மகானோட அகிம்சை வழியைப் பின்பற்றக்கூடியவனுங்க… உயிரே போனாலும் திருட மாட்டேன்.” வியாபாரி நம்பவில்லை. திருடனைச் சாதுர்யமாகப் பிடித்துக் களங்கத்தைத் துடைத் தெரிய ராமசாமி அப்பாரு முடிவுசெய்தார். கல்லாவின் நேர் மேலே இருக்கும் கூரை ஓட்டைப் பிரித்து இறங்கி திருடன் காசுகளைத் திருடுவதைக் கண்டறிந்தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in