வெங்கிட்டியின் கருணை | மயில்கள் அகவும் பெருநிலம் 19

வெங்கிட்டியின் கருணை | மயில்கள் அகவும் பெருநிலம் 19

Published on

ஸ்ரீமுக வருடத்தில் கோடைக்காற்று அகோரமாக வீசும் ஆனி மாதம். ஊருக்குள் அகாலத்தில் மரணம் நேர்ந்திருந்தது. வடக்கு வளவில் கிடை கிடந்த ஓர் அப்புச்சி (தாத்தா மூன்று மாதச் சிரமத்திற்குப் பின் கண்ணை மூடியிருந்தார். சீக்கிரத்தில் இளவட்டங்கள் எல்லாரும் இழவு வீட்டில் கூடிவிட்டோம். சுடுகாட்டில் குழிவெட்டும் வெங்கிட்டியைப் போய் கூட்டிவருவது எனக்கான வேலையாகக் கொடுக்கப்பட்டது.

ஊரிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் இருந்த இச்சுப்பட்டியில் வெங்கிட்டி வசித்தார். நாகராஜ் அண்ணன் துணைக்கு வந்தார். இருவரும் மொபட்டில் மண்புழுதிப் பாதையில் புறப்பட்டோம். இச்சுப்பட்டியின் கிழக்குக் கோடி யில் வெங்கிட்டியின் வீடு இருந்தது. சாமத்தின் அடர் இருள் சூழ்ந்த வீட்டின் வெளித்திண்ணையில் வெங்கிட்டி உறங்கிக்கொண்டிருந்தார். தலை மாட்டில் அழுக்குமோலிகள் (துணியில் முடிந்த அழுக்குத் துணிகள்) நிழலுருவாய் நிறைந்து கிடந்தன.

நாங்கள் வாசலில் நின்று கூப்பிட்டோம். தூக்கச்சடைவு கலை யாமல் எழுந்து வந்த வெங்கிட்டி புரிந்துகொண்டார். செத்துப்போனது யார் என்று விசாரித்துவிட்டுச் சொன்னார்: “வெடியால வெள்ளாவி வெக்கலாமுன்னு இருந்தேனுங்க.” ஊருக்குத் திரும்பி வரும்போது நான் நாகராஜ் அண்ணனிடம் கேட்டேன். “வெங்கிட்டி ஒரு ஏகாலி (வண்ணார்). இவரு எப்பிடிக் குழி வெட்டற காரியத்தைச் செய்யறாரு?”

“எனக்கு நெனவு தெரிஞ்சு இந்தச் சுத்துவெளியில விடாம குழிவெட்டறது நம்ம வெங்கிட்டிதான். வெங்கிட்டிக்குப் பதினைஞ்சு வயசு இருக்கும்போது ஊருக்குள்ள யாரோ செத்துப்போனப்ப பொதைக் கறதுக்குக் குழிவெட்ட ஆளில்லாம திண்டாடியிருக்காங்க. வெங்கிட்டி இரக்கப்பட்டுத் துணிச்சலா சுடுகாடு போயி குழிவெட்டிக் குடுத்துருக் காரு. அன்னைக்கு ஆரம்பிச்ச இந்தக் காரியத்தை இன்னைக்கு வெரைக்கும் ஒரு கருணையோட செஞ்சுக்கிட்டு வர்றாரு.”

நாங்கள் இழவு வீடு வந்து சேர்ந்த அரைமணி நேரத்தில் வெங்கிட்டியும் மிதிவண்டியில் வந்து சேர்ந்துவிட்டார். மம்பட்டி, கடப்பாரையுடன் சுடுகாட்டை நோக்கிச் சென்றார். எந்த ஊர் சுடுகாட்டில் எந்த இடத்தில் குழி வெட்ட வேண்டும் என்கிற நில நுட்பம் வெங்கிட்டிக்கு அத்துப்படியாகி இருந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in