பூனையின் ஊழ்வினை | மயில்கள் அகவும் பெருநிலம் 30

பூனையின் ஊழ்வினை | மயில்கள் அகவும் பெருநிலம் 30
Updated on
2 min read

‘மியாவ்…மியாவ்… மியாவ்…’ ஐந்து நாள் ஆகியும் புலிவரிப் பூனைக்குட்டியின் தீனமான குரல் ஓயவேயில்லை. எங்கள் வீட்டு முற்றத்து சிமென்ட் குழாய் தூம்புவாய் அதன் குரலைச்

சதா எதிரொலித்துக்கொண்டே இருந்தது. தாய்ப்பூனை அவ்வப்போது வந்து தூம்புவாயை எட்டிப் பார்த்துத் துயரத்துடன் கத்திவிட்டுப் போனது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருந்த விஜய வருடத்து மார்கழி அது. மொட்டைமாடியின் மழைநீர் சிமென்ட் குழாய் வழியாக முற்றத்துக்கு வந்து, முற்றத்து மழைநீரோடு சேர்ந்து இன்னொரு சிமென்ட் குழாய் வழியாகக் கீழே தரைத்தளத்திற்குச் சென்றது.

தரைத்தளத்தில் புழங்காத சம்ப் கிணற்றில் அந்த சிமென்ட் குழாய் இணைக்கப்பட்டிருந்தது. வீட்டு உரிமை யாளர் அந்த சம்ப் கிணற்றையே மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றி வலுவான சிமென்ட் மூடாக்குப் பலகைக்கற்கள் இட்டு மூடிவிட்டார்.

இப்போது சம்ப் கிணற்றுக்குள் விழுந்து உயிர் போராட்டத்தில் தவிக்கும் புலிவரிப் பூனைக் குட்டியைக் காப்பாற்ற வழி எதுவு மில்லை. என் எட்டு வயது மகன் அபி பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் மழையில் குடையைப் பிடித்தபடி முற்றத்துத் தூம்புவாய் அருகிலேயே நின்று கிடந்தான். என்னிடம் கெஞ்சியபடி சொன்னான்.

“எப்படியாச்சும் புலிவரிப் பூனைக் குட்டியைக் காப்பாற்றுங்கப்பா…” நாங்கள் வசிக்கும் சென்னை அண்ணாநகர் வீட்டின் இரண்டாம் தளத்து முற்றம்வரை மகிழ மரத்தின் கிளைகள் பரவியிருந்தன.

பகலில் அந்த மகிழமரத்துக் கிளைகளில் காகங்கள், குயில்கள், சிட்டுக்குருவிகள், சின்னான் குருவிகள், தையல்சிட்டுகள், நாகணவாய்கள், அணில்கள் வந்தமர்ந்து குரலிடும். அவை உண்பதற்காக என் மனைவி ராதா தயிரில் பிசைந்த அரிசிச்சாதத்தைக் கைப்பிடிச் சுவரில் வைப்பது அனுதின வாடிக்கை ஆயிற்று.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in