கிஜிலியின் கவிதை | மயில்கள் அகவும் பெருநிலம் 27

கிஜிலியின் கவிதை | மயில்கள் அகவும் பெருநிலம் 27
Updated on
2 min read

அந்தி வெயில் தாழ்ந்துகொண்டிருந்தது. இருபுறமும் சீமைக்கருவேலப் புதர்கள் மண்டியிருந்த ஒற்றைத் தடத்தில் பன்றிகள் உலவின. யாரும் குடியிருக்காத பனையோலைக் கூரை சரிந்த மண்சுவர் வீடு தென்பட்டது.

அதன் வாசலில் சுண்ணாம்புக்கற்கள் சுட்ட பழைய சூளை இருந்தது. நான் அந்தச் சூளையை ஒட்டிப்போய் நின்றேன். கிஜிலியைக் காணவில்லை. கிஜிலி எங்கு ஒளிந்துகொண்டிருப்பான் என்பது புதிராகவே இருந்தது. கிஜிலியின் நிஜப்பெயர் முருகன்.

வரலாற்றுப் பாடத்தில் கஜினி முகமது என்பதைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் கிஜிலி முகமது என்று சொன்னதால் இந்தப் பட்டப்பெயர். அப்போது நான் நல்லிமடம் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன்.

முழுப்பரிட்சை எழுதி முடித்த பின்னரும் வருகைப்பதிவுக்காகக் கோடை விடுமுறை முடியும்வரை நாங்கள் பள்ளிக்குச் செல்லவேண்டிய கட்டாயச் சூழலில் சிக்கியிருந்தோம். காலையில் வருகைப்பதிவு முடிந்ததும் நான் கிஜிலியின் சிநேகிதர்களோடு சேர்ந்துகொண்டு ஒளிந்து கொள்ளும் விளையாட்டு விளையாடினேன்.

கடைசிவரை எவராலும் கண்டறிய முடியாமல் ஒளிந்துகொண்டவர்கள் விளையாட்டில் வெல்வார்கள். நான் திரும்பிப் பள்ளி மைதானத்துக்கு வந்துவிட்டேன். சற்று நேரத்தில் கிஜிலி வந்து முன்னால் நின்றான். அன்றும் கிஜிலியே விளையாட்டில் வென்றான்.

அந்த ஆண்டின் பள்ளிக்கூடக் கடைசி நாள் அன்று வீட்டுக்குப் போகும் சாயங்காலத்தில் கிஜிலி சொன்னான்: “நான் எல்லா நாளும் அந்தச் சுண்ணாம்புச் சூளைக்குள்ளதான் ஒளிஞ்சிருந்தேன்…” துந்துபி ஆண்டுப் பங்குனியில் இது நடந்தது. வைகாசியில் நான் எட்டாம் வகுப்புப் படிக்க தாராபுரத்திற்குப் போய்விட்டேன்.

கிஜிலியைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அந்த மழைக்காலத்தில் செம்மறிகளின் பட்டித் தரம்புகளைப் புதிதாகக் கட்டுவதற்கு ஆள்களை அப்பா ஏற்பாடு செய்திருந்தார். தரம்பு கட்டுவதற்கான அவுனி (பனை நார்) தீர்ந்துவிட்டது. அந்தி இருள் கவிழும்போது அப்பா சவ்வாரிவண்டி பூட்டிப் புறப்பட்டார். நானும் துணைக்குப் போனேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in