

பெண்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசால் சென்னையில் தொடங்கப்பட்ட 'பெண்கள் நூலகம்' நகரில் தற்போது இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு அல்லது குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வரும் பெண்களும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்த நூலகங்கள் மாணவிகள், போட்டித் தேர்வர்கள், இல்லத்தரசிகள் எனப் பலருக்கும் பயனுள்ள வாசிப்பு மையங்களாகத் தற்போது செயல்பட்டுவருகின்றன.
வாசிக்க... உரையாட…
1962 டிசம்பரில் தொடங்கப்பட்ட சேப்பாக்கம் பெண்கள் நூலகம், பாபு ஜகஜீவன்ராம் சாலையில் (பெல்ஸ் சாலை) சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியில், கோஷா மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ளது.