திருநர்களின் தாய் வீடு! | பேரு வாங்கின ஊரு 14

திருநர்களின் தாய் வீடு! | பேரு வாங்கின ஊரு 14
Updated on: 
3 min read

விழுப்புரத்திலிருந்து 2019இல் பிரித்து உருவாக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டம். அதற்குப் பெருமை சேர்க்கும் பல ஊர்களில் முதலிடத்தைப் பிடித்துவிட்டது கூவாகம். உளுந்தூர்பேட்டையிலிருந்து அரை மணி நேரப் பயணத்தில் வந்து விடும் அமைதியான விவசாய கிராமம் இது.

சித்திரை மாதம் வந்துவிட்டாலோ தேசத்தின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துவிடும். காரணம், அங்கே கோயில் கொண்டிருக்கும் கூத்தாண்டவருக்கு (அரவான்) நடத்தப்படும் 18 நாள் சித்திரா பௌர்ணமி திருவிழா.

11ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோயில், ‘அரவான்’ என்கிற மகாபாரதத் தொன்மக் கதைக்குக் கடந்த 1,000 ஆண்டுகளாக உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

குருசேத்திரப் போரில் பாண்டவர்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, களப்பலியாக உயிர்த்தியாகம் செய்ய முன்வந்தார் அரவான். அதற்கு முன் திருமணம் செய்துகொண்டு ஒரு நாள் இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டும் என்பது அரவானின் கடைசி ஆசை. ஆனால், பெண் கிடைக்கவில்லை.

ஒரே நாளில் கணவனை இழக்க வேண்டி யிருக்கும் என்பதால் எந்தப் பெண்ணும் முன்வரவில்லை. இதைக் கண்ணுற்ற மகாவிஷ்ணு, அரவானின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரே ‘மோகினி’ என்கிற பெண்ணாக அவதாரம் எடுத்துவந்து அரவானை மணந்துகொண்டார். அரவானின் ஆசை நிறைவேறியது. மறுநாள் காலை அரவான் களப்பலி கொடுக்கப்பட்ட பின், மோகினி தன் தாலியை அகற்றி கைம்பெண் கோலம் பூண்டார்.

மொழி கடந்த கூடல்

மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத் துடன் தங்களைப் பொருத்திப் பார்க்கின்றனர் திருநங்கைகள். அரவானைத் தங்கள் குலதெய்வமாக ஏற்று இங்கே திரளாகக் கூடும் அவர்கள், தங்கள் வாழ்நாளில் முக்கியப் பண்பாட்டுப் பழக்கத்தை நினைவுகூரும் ஒன்றுகூடலாக, கூவாகம் திருவிழாவில் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வை வரித்துக் கொண்டுள்ளனர்.

Loading content, please wait...

X