தித்திப்பான சந்திப்பு! - அனுபவம் புதுமை

தித்திப்பான சந்திப்பு! - அனுபவம் புதுமை
Updated on
2 min read

1970 முதல் 1980 வரை பத்திரிகை உலகின் பொற்காலம். சாவியும் மணியனும் போட்டிப் போட்டு இதழ்களைத் தொடங்க, அதைப் பார்த்துப் புதிதாக நிறைய வார, மாத இதழ்களும், மாத நாவல்களும் பெருகின. என் போன்ற வாசக எழுத்தாளர்களுக்கு அது கொண்டாட்டமான காலம். நிறைய எழுதிக் குவித்தோம்.

அதன்மூலம் பலரிடம் பேனா நட்பு கொள்வது அன்று சுவாரசிய மான பொழுதுபோக்கு. கல்லூரியில் படித்த எனக்கு, பள்ளியில் படித்த லெட்சுமாங்குடி ஏ.கே.நாசர் கடிதமெழுத, இரண்டு ஆண்டு களாக அந்தத் தோழமை தொடர்ந்தது. ஏ.கே.நாசர் நேரில் சந்திக்க வேண்டு மென்று ஆசைப்பட்டார். நான் லெட்சுமாங் குடிக்குச் சென்றேன். என்னைப் பார்க்க நிறைய வாசகர்கள் வந்திருந்தார்கள்.

பேசிக்களித்தோம். மதியம் பிரியாணி விருந்து. கூடவே மற்றவர்களும் அவரவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரிக்க, அன்று முழுவதும் எனக்கு ராஜமரியாதைதான். ஒரு வாசக எழுத்தாளனுக்கு கிடைத்த அந்தச் செல்வாக்கு என்பது அன்று பத்திரிகைகளுக்கு இருந்த மதிப்பைப் பிரதிபலித்தது. அன்று என்னைச் சந்திக்க விரும்பிய இன்னும் இரண்டு வாசகர்களைத் தவிர்க்க முடியாத காரணங்களால் சந்திக்க முடியாமல் போனது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in