அழகான நினைவுகளின் காட்சி | பொழுதுபோக்கு

படங்கள்: கோகிலா

படங்கள்: கோகிலா

Updated on
3 min read

சென்னை அருங்காட்சியகத்தின் வாயிலில் இருந்தே, 'நான் சின்ன வயசுல இருந் தப்ப…' என ஆரம்பித்துவிட்டனர் பெற்றோர். நுழைவாயிலின் ஒரு பக்கம் பழைய தொலைக்காட்சி - வானொலிப் பெட்டிகளும் மறுபக்கம் டால்டா டின், மைலோ டப்பாக்களும் அடுக்கப்பட்டிருந்தன.

சிறார் தங்கள் பெற்றோ ரின் குழந்தைப் பருவத்துக்குள் நுழையும் வாயில் அது. பெரியவர்களோ மீண்டும் குழந்தைக ளாகவே மாறியிருந்தனர்!

எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஜூன் 19 - 21 வரை நடைபெற்ற ’பொழுதுபோக்கு’ திரு விழாவில்தான் இந்தக் காட்சிகள்.

விருப்பமான பொருள்களைச் சேகரிக்கும் பழக்கம் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்கூட இருந்தது. ’உங்க பொழுதுபோக்கு என்ன’ என்கிற கேள்விக்கு, அஞ்சல்தலைகள், அரி தான நாணயங்கள் சேகரிப்பு என்பது போன்ற பதில்கள் வரும். இப்போது அந்தக் கேள்வியே அரிதாகிவிட்டது என்கிறார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த எம்.எல்.ராஜேஷ்.

<div class="paragraphs"><p><strong>சுப்பிரமணி</strong></p></div>

சுப்பிரமணி

எல்லாமே பழசு!

யாருக்குமே நேரம் இருப்பதில்லை. திறன் பேசி, கணினி, தொலைக் காட்சித் திரைகளில் நேரத்தைச் செலவிடுகிறோம். திரைகள் ஆக்கிரமிக்காத காலக்கட்டத்தில் தம் சேகரிப்புகளைத் தொடங்கியவர்கள், தாங்கள் சேகரித்த வற்றைக் காட்சிப்படுத்தி இருந்தனர்.

முக்கோணக் கம்பியின் மீது அமர்ந்திருக்கும் கோழிகள் தட்டில் உள்ள தைக் கொத்தித் தின்னும் பொம்மை, குரங்கின் கையில் காசு வைத்து முதுகில் உள்ள பொத்தானை அழுத்தினால் குரங்கின் வாய்க்குள் போய் விழும் உண்டியல் பொம்மை ஆகியவற்றைக் காணமுடிந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in