நினைத்தாலே சுவைக்கும் பாலக்கோடு! | பேரு வாங்கின ஊரு 08

நினைத்தாலே சுவைக்கும் பாலக்கோடு! | பேரு வாங்கின ஊரு 08
Updated on
2 min read

‘தக்காளி விலையேறினா தாலியும் கழலும், தக்காளி விலையிறங்கினா விதைச்சவன் அழுவான்’, ‘தக்காளிப் பழத்துக்குக் கத்தியும் ஒண்ணு, சுத்தியும் ஒண்ணு.’ இவையெல்லாம் தமிழ் நாட்டுப்புறச் சொலவடைகள். நான்கு நூற்றாண்டு களுக்கு முன்பு, 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் தெற்கு ஆப்ரிக்காவிலிருந்து தமிழ் மண்ணுக்குக் கொண்டு வரப்பட்டது தக்காளி.

தொடக்கத்தில் அழகுத் தாவரமாகவும் பிறகு நஞ்சுப் பழமாகவும் கூடக் கருதப்பட்டு, பின்னர் ஜம்மென்று சமையற்கட்டை ஒரு சர்வாதிகாரியைப் போல் ஆக்கிரமித்துக்கொண்டது.

தக்காளி ரசமோ, தொக்கோ, சட்னியோ, சாம்பாரோ, காரசாரமான கோழிக்கறி குழம்போ அல்லது பலரும் பைத்தியமாகிக் கிடக்கும் பிரியாணியோ - எதுவாக இருந்தாலும் தக்காளி இல்லாமல் இன்று இந்தியச் சமைய லறை இல்லை.

அப்படிப்பட்ட நாட்டுத் தக்காளியைப் பயிரிட்டு, தென்னிந்தியா முழுமைக்கும் கொட்டிக் கொடுக்கிறது தர்மபுரியின் பாலக்கோடு பேரூராட்சி. இதுவொரு சட்டமன்றத் தொகுதியும்கூட.

தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த ஊருக்கு, தற்காலத்தின் தனிப்பெரும் அடையாளமாக மாறியிருக்கிறது ‘பாலக்கோடு’ தக்காளி மார்க்கெட்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in