

எண்ணிய செயல் நல்லபடியாக நிறைவேற இறைவனிடம் வேண்டிக் கொள்வதும், அந்த வேண்டுதல் நிறைவேறினால் பரிகாரமாக நேர்த்திக்கடன் செலுத்துவதும் காலங்காலமாக இருந்துவருகிறது. வேண்டுதல் ஒரே மாதிரியாக இருந்தாலும் நேர்த்திக்கடன் செலுத்துவது சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறு படுவது உண்டு.
சில நேரம் வேண்டுதலின் தன்மையைப் பொறுத்தும் நேர்த்திக்கடன் மாறும். குழந்தைகள் உடல்நலம் சரியானதும் கரும்பில் தொட்டில் கட்டி, அதில் அந்தக் குழந்தையை இட்டு, கோயிலைச் சுற்றி வலம்வருவார்கள். இவ்வகையான நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும் இருந்துவருகிறது.