

சைக்கிள்களுக்கு முன்பு உரிமம் உண்டு. இந்த உரிமம் பஞ்சாயத்து அல்லது அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்டது. அது 1.5”x1.5” அளவுள்ள ஒரு புடைப்பு (embossed) வேலைப்பாடு கொண்ட தகரவில்லை. சைக்கிள் உரிமையாளர் இதை சைக்கிளில் கட்டியிருக்க வேண்டும்.
பொதுவாக அதில் ஒரு துளையிட்டு, முன் பிரேக் கனெக்டரில் இருந்து நட்டை அகற்றி, இந்த உரிமத்தை வைத்து அந்த நட்டை மீண்டும் பொருத்து வார்கள். அவ்வப்போது காவலர்கள் பார்ப்பார்கள். டைனமோ இல்லையெனில்கூட அபராதம் போடுவார்கள்.