

பயணம் எல்லாருக்கும் பிடித்த மான விஷயம். அதிலும் நண்பர் களுடன் சேர்ந்து செல்வது ஆயுளுக்கும் மறக்க முடியாதது. எங்கள் பள்ளிக் காலங்களில் உல்லாசப் பயணம் போவது கட்டாயமான ஒன்று. ஆண்டுதோறும் காலாண்டுத் தேர்வு முடிந்த கையோடு தொடரும் விடுமுறையில் வெவ்வேறு உல்லாசப் பயணத் திட்டங்களை அறிவிப்பார்கள். விரும்பியதைத் தேர்ந்தெடுத்துச் செல்ல லாம். சென்னை, மகாபலிபுரம் ஒரு பயணத் திட்டம். அதற்கு 80 ரூபாய் கட்டணம்.
திருவனந்தபுரம், புனலூர், வர்க்கலா ஒரு திட்டம். அதற்கு கட்டணம் 60 ரூபாய். மதுரை கொடைக்கானல், தேக்கடி செல்லும் ஒரு குழு. இதற்கு 35 ரூபாய் கட்டணம். குற்றாலம் அல்லது பாபநாசத்திற்கு ஒரு குழுவாகச் செல்ல 10 ரூபாயோ என்னவோ கட்டணம். திருச்செந்தூர் அல்லது தூத்துக்குடிக் கும் 10 ரூபாய் கட்டணம். அநேகமான பயணங்கள் ரயிலில்தான் செல்வோம். அதற்குச் சலுகைக் கட்டணம், வழக்கத் தைவிட கால்பங்குதான்.