

புதுக்கோட்டையிலிருக்கிறது ஆவூர் எனும் சிற்றூர். 15ஆம் நூற்றாண்டில் இந்த ஊர் பெரம்பூர் கட்டளூர் பாளையக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை கிறிஸ்துவத் திருச் சபையின் தலைவராக இருந்தவர் ராபர்ட்-டி-நோபிலி. இவர் திருச்சிராப்பள்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு இமானுவேல் மார்ட்டின்ஸ் எனும் பாதிரியார் தலைமையில் ஒரு திருச்சபையை உருவாக்கினார். அப்போது திருச்சிராப்பள்ளி நாயக்கர்களின் வசமிருந்தது.
திருச்சியில் நாயக்கர்களுக்கும் முகமதியர் களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் எழுந்தன. இதனால் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை அமைதியான இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார்கள். அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடமே ஆவூர். பெரம்பூர் கட்டளூர் பாளையக் காரர்களிடமிருந்து ஒரு பகுதி நிலத்தைப் பெற்று பொ.ஆ. (கி.பி.) 1686இல் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை அமைத்தார்கள்.