வாழ்க்கை சுழற்சி நிதி திட்டங்களை ஏன் பரிசீலிக்க வேண்டும்?

வாழ்க்கை சுழற்சி நிதி திட்டங்களை ஏன் பரிசீலிக்க வேண்டும்?
Updated on
2 min read

நீண்டகால முதலீட்டை அணுகும் முறையில் பல முதலீட்டாளர்கள் இடையே அமைதியான மாற்றம் ஒன்று நிகழ்ந்து வருகிறது. பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் பிற சொத்துகளைத் தேர்ந்தெடுத்து தீவிரமாக நிர்வகிப்பதற்குப் பதிலாக, சில முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட முதிர்வு தேதியை மையமாகக் கொண்டு, தங்களுக்காகவே சொத்துகளை சமன் செய்யும் ஒற்றைத் நிதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த வாழ்க்கைச் சுழற்சி நிதி திட்டங்கள் ஒரு எளிய கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகின்றன. முதலீட்டுக் காலம் நீண்டதாக இருக்கும்போது அதிக பங்குகளை வைத்திருப்பது மற்றும் இலக்குத் தேதி நெருங்க நெருங்க கடன் பத்திரங்கள் மற்றும் ஒப்பீட்டளவில் நிலையான பிற சொத்துகளுக்குப் படிப்படியாக மாறுவது.

இத்தகைய நிதிகள் தங்களுடைய முதலீட்டைத் தங்கம், வெள்ளி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த சொத்துகளிலும் பரவலாக்கக்கூடும். இதன் மூலம் எந்தவொரு ஒற்றைச் சொத்து வகையையும் சார்ந்திருப்பதை முடிந்தவரை குறைக்கலாம்.

இந்த வகை முதலீடு புதியதல்ல. அமெரிக்காவில், அவ்வப்போது சந்தையில் பின்னடைவு ஏற்பட்ட போதிலும், இலக்குத் தேதி சார்ந்த உத்திகளில் உள்ள சொத்துகள் கடந்த தசாப்தத்தில் கணிசமாக வளர்ந்துள்ளன. 2025-ம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, இலக்கு தேதி நிதிகளில் கிட்டத்தட்ட 5 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது, இது முதலீட்டாளர்களிடையே அவற்றின் பரவலான பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in