

இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI), மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாப்பது, தகவல் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது, முதலீட்டாளர்களுக்கும் இடைத்தரகர்களுக்கும் இடையிலான தகவல் சமமின்மையைக் குறைப்பது ஆகியவை இவற்றின் முக்கிய நோக்கங்களாகும்.
குறிப்பாக, ரெகுலர் திட்டங்கள் மூலம் முதலீடு செய்யும்போது ஏற்படும் செலவுகள் குறித்து முதலீட்டாளர்கள் தெளிவாக அறிந்துகொள்ள இந்த நடவடிக்கைகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. செபி அறிமுகப்படுத்தியுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
1. டைரக்ட் பிளான் இயல்புநிலை தேர்வாகும் 2026 நவம்பர் 1 முதல், சொத்து மேலாண்மை நிறுவனங்களின் (Asset Management Companies – AMCs) இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும்போது டைரக்ட் பிளான் இயல்புநிலை தேர்வாக (Default Option) இருக்கும்.