

தொழில்முனைவோருக்கு அமையும் ஒரு சில தருணங்கள் எந்தவொரு விளம்பர யுக்தியையும் தாண்டி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு வியக்கத்தக்க வணிக மாற்றத்தை சந்தித்திருக்கிறது ஒரு உணவகம்.
மும்பையின் செம்பூரில் ஜஸ்பால் சிங் கல்சா மற்றும் மகிந்தர் சிங் கல்சா என்ற சகோதரர்களால் கடந்த 2021 அக்டோபரில் `டெல்லி சே' (Delhi Se) உணவகம் தொடங்கப்பட்டது.
வெறும் 250 சதுர அடி பரப்பளவில், 3 மேசைகள் மற்றும் 9 இருக்கைகளுடன் தொடங்கப்பட்ட இக்கடையின் தனிச்சிறப்பான உணவு டெல்லி ஸ்டைல் சோலே பட்டூரே. அதுதாங்க நம்ம ஊரு சோலாபூரி வித் வெள்ளை சுண்டல்.
ஆனால், இதற்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு சில மாதங்களிலேயே மங்கத் தொடங்கியது. 2022 ஜனவரி முதல் விற்பனை கடுமையாகச் சரிந்ததால், அதே ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கடன் சுமை சுமார் ரூ.18 லட்சமாக அதிகரித்தது. இதனால், கடையை மூட முடிவு செய்தனர். அப்போது எதிர்பாராத ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.