போர்ட்போலியோ மறுபரிசீலனை அவசியம்

போர்ட்போலியோ மறுபரிசீலனை அவசியம்
Updated on
2 min read

சர்வதேச நிலவரங்களால் சமீப காலமாக நிதிச் சந்தைகளின் சிக்கல்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், முதலீட்டு வளர்ச்சிக் கதைகளுக்கும் நிலைத்தன்மைக்கும் இடையிலான வேறுபாடு நாளுக்கு நாள் நுணுக்கமானதாக மாறி வருகிறது.

இன்றைய முதலீட்டாளர்கள் வெறும் ஆதாயத்தை மட்டும் எதிர்பார்ப்பதில்லை; சந்தையின் எதிர்பாராத சரிவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அதேவேளையில், அபரிமிதமான வளர்ச்சி வாய்ப்புகளிலும் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர்.

குறிப்பிட்ட துறைகள் அல்லது கருப்பொருள்களில் முதலீடு செய்வது அதிக லாபத்தைத் தரக்கூடும். ஆனால், ஒரே துறையில் முதலீடுகள் குவிந்திருப்பதால் இது சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு அதிகம் ஆட்படும் அபாயம் கொண்டதாக இருக்கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in