எனக்கு நானே முதலாளி | சம்பளம் பத்தலையா? 19

எனக்கு நானே முதலாளி | சம்பளம் பத்தலையா? 19
Updated on
2 min read

விளைகிற இடத்தில் ‘தக்காளி கிலோ 10 ரூபாய்’ என்ற செய்தியை பார்த்துவிட்டு, வீட்டருகில் இருக்கும் கடையில், ‘ஏன் கிலோ 40 ரூபாய்க்கு விற்கிறீர்கள்?’ என்ற கேள்வி கேட்பவர்கள் உண்டுதானே. அவர்கள் யோசிக்காதது, ‘என்னால் அந்தக் கிராமத்துக்குப் போய், எனக்குத் தேவையான அரைக் கிலோ தக்காளி மட்டும் வாங்கிக்கொண்டு வந்து, அதன் பிறகு குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஓட முடியுமா?’ என்பதுதான்.

தக்​காளி, விளை​யும் இடத்​திலிருந்து கூடைகளில் கோயம்​பேடு போன்ற மொத்த சந்​தைக்கு லாரி​யில் வரவேண்​டும். அவற்றை இறக்கி வைத்​துப்பின், விடி​காலைக்கு வெகுநேரம் முன்பே தூக்​கத்​தைத் துறந்​து, மொபெட்​டுக்​குப் பெட்​ரோல் போட்​டு, சில கிலோ மீட்​டர் வண்டி ஓட்​டி, கோயம்​பேடு கடைக்கு வந்​து, கூட்​டத்​தில் காத்து நின்​று, நம் வீட்​டரு​கில் இருக்​கும் சிறு கடைக்கு அதில் ஓரிரு கூடைகளை ஒரு​வர் கொண்டு வரவேண்​டும்.

அவர், வாடகைக்கு கடைபிடித்​து, அதில் தக்​காளியை விற்​பனைக்கு வைக்க வேண்​டும். வாங்க வரு​கிறவர்​கள், ஒவ்​வொன்​றை​யும் புரட்​டி, அழுத்​திப் பார்த்​து, நல்​ல​தாக பொறுக்கி எடுத்​துக்​கொண்டு போன பின் மீறும் சுமா​ரான மற்​றும் அழுகத் தொடங்​கும், விலை போகாத தக்​காளி​களின் நட்​டத்தை ஏற்​றுக்​கொள்ள வேண்​டும்.

இப்​படி பலரும் உழைத்​து, செலவு செய்​தால் மட்​டுமே, தூங்கி எழுந்​து, கட்​டிய லுங்கி அல்​லது நைட்​டி​யுடன் அப்​படியே நாலு எட்​டுப் போய், கால் கிலோ தக்​காளி வாங்க முடி​யும். விளை​யும் இடங்​களுக்​கும், கிடைக்​கும் கடைகளுக்​கும் இடை​யில் எவ்​வளவு தூரம், எவ்​வளவு வேலைகள், எவ்​வளவு பேர், எவ்​வளவு செலவு செய்​தால் வாங்​குபவர்க்கு அரு​கில் அவை கிடைக்​கும்! அவற்றை யார் கொடுப்​பது? அவையெல்​லாம் சேர்ந்​தது​தான் சில்​லரை விலை (ரீடெ​யில் பிரைஸ்). அவர்​கள் செய்​யும் செல​வு, அவர்​களது உழைப்பு மற்​றும் சிந்​தனை ஆகியவை இலவசமல்ல. அவற்​றுக்​கும் விலை மதிப்பு உண்​டு.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in