

ஆரக்கிள் நிறுவனத்தின் தீடீர் பணிநீக்கத்துக்கு மத்தியில், பெங்களூரு அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர், தனது வேலையை இழந்தபோதும் பதற்றப்படாமல் முன்கூட்டியே திட்டமிட்டு சேமித்த பணத்தில் அமைதியான வாழ்க்கையை தொடர்கிறார். இதுகுறித்த ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாயக் சத்யா என்பவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எனது நெருங்கிய நண்பர் ஒருவர் பெங்களூரு ஆரக்கிள் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அவரிடம் எந்தப் பதற்றமும், அழுத்தமும் இல்லை; சமூக வலைதளங்களில் அவர் புலம்பவும் இல்லை.
அவர் உடனடியாகத் தனது சொந்த ஊரான புவனேஸ்வருக்குத் (ஒடிசா மாநிலம்) திரும்பினார். அவர் தபால் நிலையத்தில் தலா ரூ.15 லட்சம் மதிப்பிலான இரண்டு கூட்டுக் கணக்குகளில் (ஜாயின்ட் அக்கவுன்ட்) நிலையான வைப்புத் தொகைகளை (FDs) வைத்திருந்தார். ஒன்று அவரது பெற்றோருடனும், மற்றொன்று அவரும் அவர் மனைவியின் பெயரிலும் இருந்தது. அவரது குழந்தைகளின் கணக்கிலும் ஒன்று வைத்திருந்தார்.