‘கருப்பொருள்’ முதலீடு வாய்ப்புகளும் உத்திகளும்

‘கருப்பொருள்’ முதலீடு  வாய்ப்புகளும் உத்திகளும்
Updated on
1 min read

டிஜிட்டல் மயம், நுகர்வோர் கலாச்சார வளர்ச்சி, எரிசக்தி மாற்றம், உற்பத்தித் துறையின் எழுச்சி எனப் பொருளாதாரத்தில் நீண்டகால அடிப்படையில் ஏற்படும் மாற்றங்களை அறுவடை செய்ய 'தீமெடிக் முதலீட்டு' உத்தி முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.

தனிப்பட்ட நிறுவனங்களையோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொழில் துறையையோ மட்டுமே சார்ந்து இருக்காமல், பரந்த பொருளாதாரக் கருப்பொருள்களில் (Themes) முதலீடு செய்வதே இதன் மைய நோக்கமாகும். இருப்பினும், இந்த முதலீட்டு முறையில் கவனிக்க வேண்டிய சில சவால்களும் அடங்கியுள்ளன.

சந்தை சூழலில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்களே முதல் சவாலாகும். வட்டி விகிதம், பணவீக்கம், அரசின் கொள்கைகள் மற்றும் பணப்புழக்கம் போன்ற காரணிகளால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறை முன்னிலை வகிக்கும்.

கடந்த கால தரவுகளைப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிறப்பாக செயல்பட்ட துறைகள் அடுத்த கட்டத்தில் பின்தங்கக்கூடும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in