எண்ணெய் நெருக்கடியும்.. தங்க மோகமும்..

எண்ணெய் நெருக்கடியும்.. தங்க மோகமும்..
Updated on
3 min read

ஈரானைச் சுற்றியுள்ள போரும் அதனால் உருவான புவிசார் அரசியல் பதற்றங்களும், கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகமாகச் சார்ந்துள்ள நாடுகளுக்கு கடினமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

நாம் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85–89 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம். போர் சூழ்நிலையினால் கச்சா எண்ணையின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுவரை, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவில் ஏற்பட்ட அதிகரிப்பின் பெரும்பகுதி நுகர்வோருக்கு முழுமையாக மாற்றப்படாமல், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) ஏற்றுக் கொண்டுள்ளன.

தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது சமீபத்திய விலை ஏற்றத்தில் 10% மட்டுமே ஆகும். கச்சா எண்ணெய் விலை நீண்டகாலம் இதே நிலையில் தொடர்ந்தால், இந்தச் சுமையை நிரந்தரமாக ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை. இதனால் அரசின் பற்றாக்குறை நிதி அதிகரிக்கும் அபாயம், பணவீக்கம் உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடையும். பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்.

அதிக தங்க நுகர்வு ஏற்படுத்தும் சிக்கல்

இந்தியாவுக்கு இன்னொரு கட்டமைப்பு சார்ந்த சவாலும் உள்ளது - அதாவது தங்க நுகர்வு. நாட்டின் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்ய பெருமளவில் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இது ஒரு பக்கம் டாலர் செலவையும் மறுபக்கம் ரூபாய்–டாலர் மாற்று விகிதத்தின் மீது கூடுதல் அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

உலக அளவில் தங்கம் கையிருப்பு வைத்திருப்பதில் இந்திய குடும்பங்கள் முன்னிலையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சுமார் 25,000 முதல் 34,000 டன் தங்கம் இந்தியர்களிடம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

நகைகள், நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் கோயில் களஞ்சியங்கள் போன்ற வடிவங்களில் இருக்கும் இந்தத் தங்கத்தின் மதிப்பு பல லட்சம் கோடி டாலர்களாக இருக்கலாம். இது இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ தங்க கையிருப்பைவிட (சுமார் 900 டன்) பல மடங்கு அதிகம்.

இந்தியாவில் திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் மத பாரம்பரியங்களில் தங்கம் கலாச்சார முக்கியத்துவம் பெறுவதோடு, பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு எதிரான பாதுகாப்பான நீண்டகால முதலீடாகவும், குறிப்பாக கிராமப்புறங்களில் நம்பகமான நிதி சேமிப்பு வடிவமாகவும் கருதப்படுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in