வரம்பு இல்லாதது பிளெக்சிகேப் ஃபண்ட்

வரம்பு இல்லாதது பிளெக்சிகேப் ஃபண்ட்
Updated on
1 min read

பிளெக்சிகேப் ஃபண்ட் (Flexicap Fund) என்பது கடுமையான ஒதுக்கீட்டு வரம்புகள் எவையும் இல்லாத ஒரு பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டமாகும்.

இதில், போர்ட்ஃபோலியோவில் பெரிய, நடுத்தர அல்லது சிறிய நிறுவனங்களின் பங்குகள் எவ்வளவு சதவீதம் இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

ஃபண்ட் மேலாளர் முழு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக முதலீட்டை மாற்றிக் கொள்ளலாம்.

பங்குகளின் மதிப்பு அதிகமாகத் தோன்றும்போது அல்லது சந்தை நிலையற்றதாக மாறும்போது, ஃபண்ட் மேலாளர் பாதுகாப்பான பெரிய நிறுவனப் பங்குகளில் அதிக கவனம் செலுத்துவார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in