என்ன சொல்கிறது.. புதிய வருமான வரி விதிகள் 2026

என்ன சொல்கிறது.. புதிய வருமான வரி விதிகள் 2026
Updated on
2 min read

இப்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961-ல் இயற்றப்பட்டது. இது கடந்த 65 ஆண்டுகளாக அமலில் உள்ளது. இது மிகவும் பழமையானதாகவும், சிக்கலான சட்ட வார்த்தைகளைக் கொண்டதாகவும் இருந்ததால், அதனை எளிமைப்படுத்தி நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றவே புதிய வருமான வரிச் சட்டம் 2025-ல் இயற்றப்பட்டது. இது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

தேவையற்ற குழப்பங்களையும் வரி தொடர்பான வழக்குகளையும் குறைப்பது, டிஜிட்டல் பொருளாதாரத்தை முறைப்படுத்துவது மற்றும் வரி செலுத்துவோர் எளிதாகப் புரிந்து கொண்டு தாமாகவே முன்வந்து வரி செலுத்தும் சூழலை உருவாக்குவதுதான் இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த நடைமுறையின் அடுத்தகட்டமாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2026 பிப்ரவரி 7-ம் தேதி ‘வரைவு வருமான வரி விதிகள், 2026’ (Draft Income Tax Rules, 2026) என்ற ஆவணத்தை வெளியிட்டது.

இந்த வரைவு விதிகள் குறித்து வரி நிபுணர்கள், தொழில்முறை ஆலோசகர்கள், தொழில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்கள் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டு புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன.

வரைவு விதிகள் - 2026 என்றால் என்ன?

ஒரு வருமான வரி சட்டம் இயற்றப்படும்போது, அதன் கீழ் பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட நடைமுறைகள், வரம்புகள், படிவங்கள், மதிப்பீட்டு முறைகள் போன்ற விரிவான விவரங்கள் ‘விதிகள்’ (Rules) மூலம் வழங்கப்படுகின்றன. இவ்வாறு சிறு சிறு செயல்முறை விவரங்களை சட்டத்திலேயே சேர்த்தால் அது மிக நீளமானதாகவும் சிக்கலானதாகவும் மாறும். ஆகையால், சட்டம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்க, அதனுடன் இணைந்த விதிகள் தனியாக அறிவிக்கப்படுகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in