

பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் தங்கம் ஆகிய மூன்றிலும் ஒரே நேரத்தில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான உத்தி. ஆனால், தனித்தனியாக ஃபண்டுகளைத் தேர்வு செய்து, சந்தை நகர்வுகளுக்கு ஏற்ப பணத்தை மாற்றி, போர்ட்ஃபோலியோவை நாமே நிர்வகிப்பது சாதாரண விஷயமல்ல.
அதற்கு அதிக நேரமும் உழைப்பும் தேவை. இந்தச் சவாலுக்கு ஒரே முதலீட்டின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கிறது மல்டி-அசெட் ஆக்டிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் (எஃப்.ஓ.எஃப்). முதலீட்டுச் சந்தையில் எந்த ஒரு சொத்தும் எப்போதும் முதலிடத்தில் இருப்பதில்லை.
கடந்த 2025-ல், தங்கம் விலை உயர்ந்தபோது, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் பின்தங்கின. வேறு சில காலங்களில், பங்குகள் வீழ்ச்சியடைந்தபோது கடன் பத்திரங்கள் கைகொடுத்தன. சில சமயங்களில் தங்கம் மந்தமாக இருக்க, பங்குகள் அசுர வளர்ச்சி கண்டன.