

உலகப் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் சூழலில், அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் கடுமையான பொருளாதார மந்தநிலை (Recession) வரப்போகிறது; அதற்காக இந்தியர்கள் அனைவரும் அவசரகாலத் திட்டங்களை தயார் செய்து வருகிறார்கள் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் இந்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, எல்நினோ உள்ளிட்டவை இதற்குக் காரணமாக உள்ளது. நிஜமாகவே இந்தியப் பொருளாதாரம் ஆபத்தில் இருக்கிறதா? மத்திய அரசின் தற்போதைய புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? விரிவாகப் பார்ப்போம்.
23 மாதங்களில் இல்லாத பணவீக்கம்
மத்திய புள்ளியியல் அமைச்சகம் அக்டோபர் 12, 2026 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.54% ஆக உயர்ந்துள்ளது.
இது கடந்த 23 மாதங்களில் இல்லாத மிக உயர்ந்த அளவாகும். இதற்கு முக்கியக் காரணம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான். நாட்டின் உணவுப் பணவீக்கம் 7.74% ஆக எகிறியுள்ளது.
எல்நினோ தாக்கம்
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றமான 'எல் நினோ' நிகழ்வு, இந்தியாவைத் தாண்டி உலகளாவிய விவசாயத் துறையிலும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் நேரடி விளைவுகள் வருமாறு: