

கவனித்திருக்கலாம். தூறல்தான். ஆனால், இரவெல்லாம் தூறியிருந்தால், காலையில் சாலைகளில் தண்ணீர் நிற்கும். வருமானம் பெரிதாக இருந்தால்தான் சிலர் அவற்றுக்கு முயற்சிப்பார்கள். சிறிய தொகைகளில் அவர்களுக்கு விருப்பம் இருக்காது. ஆனால், வேறு சிலர், எவ்வளவு சிறிய தொகையானாலும் விடமாட்டார்கள்.
ஒருவர், அவருக்கு இதயத்தில் பிரச்சினை வருமா? என்று மருத்துவரிடம் கேட்டிருக்கிறார். அவருடைய பழக்க வழக்கங்கள் குறித்துக் கேட்டு அறிந்துகொண்ட மருத்துவர், “நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு இதய நோய் வருவதற்கான, குறிப்பாக ‘ஹார்ட் அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பு குறைவு. காரணம், நீங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறீர்கள். ‘வாக்கிங்’ போகிறீர்கள்” என்று சொன்னார்.
“அதனால்?” என அந்த நபர் கேட்க, “அதனால் உங்கள் இதயத்தைச் சுற்றி பல புதிய சிறிய ரத்தக்குழாய்கள் உருவாகி, இதயத்துக்கு ரத்தத்தை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. மற்றவர்களைப் போல உங்களுக்கும் முக்கிய குழாயில் அடைப்பு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டாலும், இந்த சின்னச் சின்ன குழாய்கள் மூலமாக வருகிற ரத்தம், இதயம் தொடர்ந்து இயங்க உதவியாக இருக்கும். மாரடைப்பைத் தடுக்கும்” என்றார் மருத்துவர்.
கிரிக்கெட் விளையாட்டில் ஓடி ஓடி எடுக்கும் ரன்கள் 1,2,3 போன்றவை. அப்படி சில்லரை சில்லரையாக 100, 140 ரன்கள் கூட ஓடியே எடுத்தவர்கள் உண்டு. அடித்த பந்து, எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டால், தாண்டி விட்டால் அதற்குப் பெயர், ‘பவுண்டரி’ அதற்கு 4 ஓட்டங்கள் கணக்கு. தரையைத் தொடாமல் எல்லைக் கோட்டைத் தாண்டினால் 6 ஓட்டங்கள். அது சிக்ஸர்.